Header Logo
Mogo Academy

கிழக்கு
மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

Aug 3, 2025 - 03:02 PM -

0

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!
Mobitel inner

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் சடலத்தில் கழுத்து, தலை மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர். நேற்று (02) முதல் அவர் காணாமல் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் வருகை தந்து, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

இதேவேளை, இலவச ஜனாசா சேவைகளை மேற்கொள்ளும் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, உரிய தரப்பினருக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். 

மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்பநாய் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara