Header Logo
Mogo Academy

ஏனையவை
சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்!

Aug 8, 2025 - 04:55 PM -

0

சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்!
Mobitel inner

கொழும்பில் வசித்து வரும் தினைஷ் மற்றும் சுதர்சினி தம்பதிகளின் 6 வயதான மகன் தினேஸ் ஹெதேவ்.  இவர் கொழும்பு சென்ட் பெனடிக்ட் கல்லூரியிலும் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.

சிறு வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வரும் ஹெதேவ் இன்று (08) சென்ட் பெனடிக்ட் கல்லூரியில் நடைபெற்ற சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது, அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார்.

இவரது இந்த முயற்சியைக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா போன்றோர் சிறுவனின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அவருக்குச் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara