Header Logo
Mogo Academy

ஏனையவை
நீரோடைக்குள் இருந்து சடலமொன்று மீட்பு

Aug 10, 2025 - 12:17 PM -

0

நீரோடைக்குள் இருந்து சடலமொன்று மீட்பு
Mobitel inner

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராக்குடிவில் பகுதியில் உள்ள சிறிய நீரோடைக்குள் இருந்து 48 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலமொன்று நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

பசறையைச் சேர்ந்த இவர், முந்தல் - அங்குனவில் பகுதியில் உள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றி வந்த வேளையில் கடந்த 08 ஆம் திகதி தனது சம்பளத்தை பெற்றுக் கொண்டு தாராக்குடிவில் உள்ள சிறிய நீரோடைக்குள் அருகில் அவரும் மற்றொருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே பசறைப் பகுதியைச் சேர்ந்த நபர் நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிவானின் முன்னிலையில் சடலம்  மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவருடன் இணைந்து மது அறிந்தியதாக கூறப்படும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாரும், புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara