Aug 10, 2025 - 05:19 PM -
0
தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற மாணவிகள் இருவரை, கராத்தே மாஸ்டர் ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை, குறித்த பயிற்சி வகுப்புக்கு அந்த இரண்டு மாணவிகளும் சென்றுள்ளனர்.
அவர்களிடத்தில் அந்த பயிற்சி வகுப்பை நடத்தும், கராத்தே மாஸ்டரான ஜெயின் மிலோட், 'குட் டச், பேட் டச்' என்றால் என்ன என்பதை விளக்கமளிப்பதாக கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அங்கு கராத்தே மாஸ்டர், குறித்த மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொள்ள முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்த மாணவிகள் இருவரும் தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், கராத்தே மாஸ்டரை குளச்சல் மகளிர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது, போக்சோ உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
குறித்த கராத்தே வகுப்பில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

