Aug 13, 2025 - 04:54 PM -
0
நெல்லை - பாளையங்கோட்டை அரச வைத்திய கல்லூரி வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக பலவேசம் என்ற நபர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சத்திரசிகிச்சைக்கு முன்னர், குறித்த நபர் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி விடுமாறு அங்கு பணியாற்றிய தாதியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பலவேசம் தாம் அணிந்திருந்த ஏனைய ஆபரணங்களை அகற்றிய போதிலும், தமது கை விரலில் இருந்த மோதிரத்தை மாத்திரம் அகற்ற முடியவில்லை.
பின்னர் அங்கிருந்த தாதியர்களும் பல மணிநேரம் முயற்சித்தும், அந்த மோதிரத்தை அகற்ற முடியவில்லை.
முயற்சி பலனளிக்காததால் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு சென்று, மோதிரத்தை அகற்றி வருமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பலவேசம் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசியுடன் தீயணைப்பு நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு, வெட்டும் நவீன உபகரணத்தை கொண்டு தீயணைப்பு வீரர்கள் அவரது மோதிரத்தை அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

