Aug 14, 2025 - 03:02 PM -
0
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மஹால்கஞ்ச் கச்சனாவு பகுதியில், அமைதியாக வாழ்ந்து வந்த ஒரு கிராமத்தின் அமைதியை ஒரு மிரளவைக்கும் சம்பவம் உலுக்கியது.
அன்சார் அஹமத், 38 வயது நிரம்பிய ஒரு சாதாரண மனிதர், 2011 இல் சபிதுல் என்ற பெண்ணை மணந்தார். ஆனால், 14 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், குடும்பத்தின் வற்புறுத்தலால், அன்சார் கடந்த மார்ச் மாதம் ஹரிமாவு பகுதியைச் சேர்ந்த நஸ்னீன் பானு என்பவரை இரண்டாவது மனைவியாக மணந்தார்.
மூவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர், ஆனால் இந்த ஏற்பாடு நஸ்னீனுக்கு ஒருபோதும் பிடிக்கவில்லை.வீட்டில் இரு மனைவிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டைகளும் வெடித்தன.
ஒரு மாதத்திற்கு முன், ஒரு கடுமையான மோதலில், மூத்த மனைவி சபிதுல் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், அன்சாரும் நஸ்னீனும் மட்டும் வீட்டில் இருந்தனர். ஆனால், இந்த புதிய வாழ்க்கை நஸ்னீனுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
அன்சார் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தது அவர் அறிந்தபோது, அவரது மனம் கோபத்தாலும் வேதனையாலும் கொதித்தது. அன்சாரை கண்டித்தும், அவர் தன் உறவை முறித்துக்கொள்ள மறுத்ததால், நஸ்னீனின் மனதில் பழிவாங்கும் எண்ணம் தோன்றியது.
அந்த நாள் வந்தது. அமைதியான ஒரு மாலைப் பொழுதில், நஸ்னீன் தனது திட்டத்தை செயல்படுத்தினார். அன்சாருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். மயங்கி விழுந்த அவரை, கத்தியை எடுத்து கொடூரமாக தாக்கினார்.
அன்சாரின் வயிறு, கை, கால் என உடல் முழுவதும் சரமாறியாக வெட்டினார். வலியால் அறை மயக்கத்தில் கதறிய அன்சாரின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, மிகவும் மிரளவைக்கும் வகையில், அவரது பிறப்புறுப்பை அறுத்து வீசினார்.அன்சாரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்தனர்.
அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அன்சார், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் கிடந்தார்.
அவரது பிறப்புறுப்பு தனியாக வெட்டப்பட்டு கிடந்தது. நஸ்னீன் வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அன்சார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு ரைப்ரேலி எயிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, நஸ்னீனைத் தேடி கைது செய்தனர். விசாரணையில், அவர் தனது கோபத்திற்கு காரணமாக அன்சாரின் கள்ளக்காதலை குறிப்பிட்டார்.
முதல் மனைவியுடனான மோதல்கள், கணவனின் துரோகம் ஆகியவை அவரை இந்த கொடூர செயலுக்கு தூண்டியதாக தெரிவித்தார். அன்சாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், நஸ்னீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் மஹால்கஞ்ச் கச்சனாவு பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குடும்பத்தின் உடைந்த உறவுகளும், கள்ளக்காதலின் விளைவுகளும் இப்படியொரு பயங்கரமான முடிவை ஏற்படுத்தியது, அப்பகுதி மக்களை மட்டுமல்ல, மருத்துவமனை ஊழியர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.

