Aug 17, 2025 - 12:51 PM -
0
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன்தான் அர்ஜுன் டெண்டுல்கராவார்.
அர்ஜுன் டெண்டுல்கருக்கும், சானியா சந்தோக்குக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வௌிவந்தன
இதனையடுத்து அவர் தொடர்பான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்தும் வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில், அர்ஜுன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு தொடர்பில் தற்போது புதிய தகவல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
சச்சினின் செல்வாக்கு ரசிகர்களுக்குப் புதிதல்ல, ஆனால் அர்ஜுனுக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், 2021ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தினால் 1 கோடியே 40 லட்சம் ரூபாவை குவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில், மும்பை அணியால் 20 இலட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர், 2023 ஆம் ஆண்டில் அதே அணியால் 30 இலட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
ஐபிஎல் தவிர, உள்ளூர் கிரிக்கெட்டில் அர்ஜுன் கோவாவுக்காக விளையாடுகிறார். வேகப்பந்து வீச்சாளராக செயற்படும் அவர் ரஞ்சி கிண்ணம், விஜய் ஹசாரே கிண்ணம் மற்றும் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிகளில் கோவாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இதன்மூலம் உள்நாட்டு கிரிக்கெட் மூலம், அர்ஜுன் ஆண்டுதோறும் சுமார் ரூபாய் 10 லட்சத்தை ஈட்டுகின்றார். மொத்தத்தில், அவரது சொத்து மதிப்பு சுமார் 22 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது.
இதுதவிர தமது குடும்பத்தினர் வழங்கிய 39 கோடி ரூபாய் சொகுசு வீட்டில் அர்ஜூன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மறுபுறம், சானியா மும்பையின் பிரபல தொழில்முனைவோரான ரவி கேயின் பேத்தி ஆவார்.
விருந்தோம்பல் மற்றும் உணவுத் தொழில்களில் பிரசித்தம் பெற்ற குடும்பம் என்பதுடன் சானியாவும் செல்லபிராணி பராமரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், சானியாவை, அர்ஜூன் திருமணம் செய்வது உறுதியானால், அவரது சொத்து மதிப்பு மேலும் பல கோடி ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

