Header Logo
SLIC
கிழக்கு
மாநகரசபை முதல்வருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு

Aug 18, 2025 - 06:32 PM

மாநகரசபை முதல்வருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையிட்டு மட்டு நகர் பகுதியை தவிர ஏனைய பல பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டு வழமை போல மக்களின் இயல்பு வாழ்கை இடம்பெற்றது.

 

அதேவேளை நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து முதல்வருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் 5 மாநகரசபை  உறுப்பினர்கள் இன்று (18) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

 

இலங்கை தமிழரசு கட்சி வடக்கு - கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி ஆட்சி செய்யும் மாநகரசபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்தனர்.

 

இதனையடுத்து இன்று காலையில் கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, செங்கலடி, ஓட்டுமாவடி மற்றும் மட்டக்களப்பு நகரை தவிர ஏனைய பிரதேசங்களில் வழமைபோல கடைகள் திறக்கப்பட்டு இலங்கை போக்குவரத்து பஸ் வண்டிகள், தனியார் போக்குவரத்து பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பாடசாலைகள் இயங்கியது அதேவேளை பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டதுடன் பல வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கை  ஈடுபட்டனர்.

 

அதேவேளை தமிழரசு கட்சி ஆட்சியை கைப்பற்றிய சில பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பொதுசந்தைகள் மூடப்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

இருந்தபோதும்  மட்டக்களப்பு நகரில் உணவகங்களை தவிர ஏனைய கடைகள் அனைத்தும் காலை 10.00 மணிக்கு திறப்பது வழக்கம். இந்த நிலையில் நகரில் காலையில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் சென்று திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு தெரிவித்தார்.

 

அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் சென்று கடைகளை மூடவேண்டாம் திறக்குமாறு தெரிவித்து ஏட்டிக்கு போட்டியாக இரு கட்சிகளும் செயற்பட்டன.

 

இந்த நிலையில் மாநகரசபை முதல்வர் வாகனத்தில் சென்று கடைகளை மூடுமாறு தெரிவித்தபோது, அங்கு வர்த்தகர்களுக்கும் முதல்வருக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

 

இதனையடுத்து வர்த்தகர்கள் மூடுவதா? திறப்பதா? என என்ன செய்வது என தெரியாது திண்டாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் 10.00 மணிக்கு  பின்னர் சில வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறந்தனர்.

 

இந்த நிலையில் மாநகரசபை முதல்வர் அரச வாகனத்தை ஹர்த்தாலுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தி கடைகளை மூடுமாறும் அல்லது அனுமதி பத்திரம் நிறுத்தப்படும் என வர்த்தகர்களை மிரட்டி அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு தெரிவித்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாநகர சபையின் தேசிய மக்கள் சகத்தி 5 உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ததுடன் ஈரோஸ் கட்சியின் இரா. பிரபாகரன் வர்த்தகர்களை மிரட்டி கடைகளை முதல்வர் பூட்டியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  

 

இதனையடுத்து மாநகர சபை முதல்வரை பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278