Header Logo
Mogo Academy

செய்திகள்
எதிர்க்கட்சித் தலைவர் மஹ்பூபானி இடையே விசேட சந்திப்பு

Aug 19, 2025 - 02:54 PM -

0

எதிர்க்கட்சித் தலைவர் மஹ்பூபானி இடையே விசேட சந்திப்பு
Mobitel inner

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று இன்று (19)  நடைபெற்றது.

 

கொள்கை வகுப்பு, நிர்வாகம் மற்றும் சமாதானத்தை கட்டியமைத்தல் ஆகிய தலைப்புகளில் இரு தரப்பினரும் முக்கியமாக விஷேட கலந்துரையாடல்களை நடத்தினர். இதில், சிங்கப்பூரின் பொருளாதார மாற்றத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் இரண்டும் ஒரு வலுவான கொள்கை வகுத்தல் செயல்முறையின் விளைவாகும் என்று சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார்.

 

எனவே, சிங்கப்பூரின் அனுபவத்திலிருந்து இலங்கை பல தனித்துவமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும், பயனுள்ள மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை வகுக்கும்போதும் அவர்களின் திறனை மேம்படுத்துகின்ற போதும் இலங்கையின் அரச தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் தமது நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்வதில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கிஷோர் மஹபூபானியிடம் கேட்டுக் கொண்டார்.

 

சிங்கப்பூரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல நடைமுறைப் பாடங்கள் உள்ளன என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

 

இலங்கைக்கு வருகை தந்து கொள்கை வகுப்பாளர்களுடன் நேரடியாக ஈடுபடுமாறு கிஷோர் மஹாபூபானிக்கு கௌரவமான அழைப்பை விடுத்தார். இவை தவிர, இரு தலைவர்களும் அமைதி, சமாதானம் மற்றும் சமூக நீதியின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினர்.  நேர்மை, உள்ளடக்கம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றுடன் நிலைத்தன்மை இணைந்து செல்ல வேண்டும் என்றும், பொருளாதார வளர்ச்சி அனைத்து குடிமக்களுக்கும் பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

 

கிஷோர் மஹபூபானி ஒரு பிரபலமான சிங்கப்பூர் இராஜதந்திரியும் கல்வியலாளரும் எழுத்தாளருமாவார். அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிங்கப்பூரின் நிரந்தர பிரதிநிதியாகவும், இரண்டு முறை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் லீ குவான் யூ பொதுக் கொள்கைக் கல்லூரியின் ஸ்தாபக பீடாதிபதியாகவும், தற்போது ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு உறுப்பினராகவும் கடமையாற்றுகிறார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara