Aug 19, 2025 - 05:34 PM -
0
கம்பஹா மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் குற்ற வலையமைப்புடன் தொடர்புடைய குழுவொன்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே, சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
இதன்போது, 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, பரகந்தேனிய, தலுவகொடுவ மற்றும் கட்டான பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, ஒன்பது T-56 மெகசினுடன் 183 தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் ரக 280 தோட்டாக்கள், ஒரு வாள் மற்றும் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், கார் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
