Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு வியாபாரிகள் கைது

Aug 20, 2025 - 12:24 PM

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு வியாபாரிகள் கைது
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்புக்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்துக்காக எடுத்து கொண்டு சென்ற இரு வியாபாரிகளை இன்று (20) அதிகாலையில் நகர்பகுதியில் வைத்து 3,700 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் 120,640 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்தார். 

பொலிஸ் நிலைய பொலிஸ் கொஸ்தாப்பர் ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவலையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலரத்னவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயசிங்க தலைமையில் சமரபண்டு, ரதன் ஆகிய பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 4.00 மணியளவில் நகர்பகுதி திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதன்போது, கொழும்பிலிருந்து பேருந்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்த போதைப்பொருளைக் கடத்தி வந்து குறித்த வியாபாரிகளிடம் வழங்கிய நிலையில், அதனை வாங்கிக்கொண்டு செல்லும்போது வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைச் சுற்றிவளைத்து, 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3,200 மில்லிகிராம், மற்றொரு 23 வயதுடையவரிடமிருந்து 4,500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்களுடன் கைது செய்தனர். 

மேலும், ஒரு இலட்சத்து இருபதாயிரத்து நாற்பத்து ரூபா (120,640) பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும், அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278