Header Logo
Mogo Academy

கிழக்கு
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Aug 20, 2025 - 02:19 PM -

0

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Mobitel inner

இலங்கை கிரிக்கெட் சபையும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள், மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு இன்று (20) உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் தலைமையில் கொழும்பிலுள்ள டன்சன் வெள்ளை அரங்கில் நாடளாவிய ரீதியில் 24 மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உபகரணங்கள் வழங்கும் விழாவைத் தொடர்ந்து, மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கம், கிழக்கு மாகாண கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் எம்.பி. ரஞ்சன் மற்றும் செயலாளர் விவேகானந்தராஜா பிரதீபன் ஆகியோர் தலைமையில், உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று மண்முனை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியபிரியா வில்வரட்ணம், உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சுதாகரன், பிரதான கணக்காய்வாளர் ஜே.எம். நியாஸ், மட்டு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். ஜாவிட், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். ரவி, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். தங்கேஸ்வரன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். ஆனந்தரூபன், மற்றும் பாடசாலை அதிபர்கள், மட்டக்களப்பு கிரிக்கட் சங்கத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara