Header Logo
Mogo Academy

கிழக்கு
140 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றல்

Aug 24, 2025 - 07:54 PM -

0

140 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றல்
Mobitel inner

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள், பணம் மற்றும் வாகனங்களுடன் 2 சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இரவு கொழும்பு மாவட்டம் ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தலியத்த வீதியில் உள்ள வீடு ஒன்றினை அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சமீன் ஹுசைன் சந்தேக நபரும் அம்பாறை பகுதியில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் உகண பகுதி வேரங்கெட்டகொட சேர்ந்த 21 வயதுடைய தருஷ லக்மால் சந்தேக நபரும் பொலிஸாரினால் கைதாகினர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் மற்றும் வாகனங்களை கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

பிரதான சந்தேக நபரின் வீட்டில் காணப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதுடன் மேலும் பொலிஸார் வீட்டின் கூரையை சோதனை செய்தபோது அங்கு மறைந்திருந்த அம்பாறை உகண பகுதி வேரங்கெட்டகொட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அந்த சந்தேக நபர் போதைப்பொருள் அம்பாறைக்கு போதைப்பொருட்களை கொண்டு வரும் ஒரு நபர் என பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கோதா அசங்கவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு போதைப்பொருள் அனுப்பப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

மேலும் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த கைது நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் கட்டளையின் பிரகாரம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara