Header Logo
Mogo Academy

உலகம்
ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்!

Aug 27, 2025 - 12:29 PM -

0

ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்!
Mobitel inner

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார்.

 

குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது.

 

இந்நிலையில் சீனாவுக்கு சீட்டாட்டத்தின் பாணியில் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,

 

அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன. நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோதும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை என தெரிவித்தார்.

 

அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.

 

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என கூறினார்.

 

அதேநேரம், 'இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும்' என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara