Aug 27, 2025 - 12:56 PM -
0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ரேகா கல்பெலியா (வயது55). இவரது கணவர் காவ்ரா கல்பெலியா.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். 5 குழந்தைகள் பிரசவித்த சில நாட்களிலேயே இறந்து போயுள்ளது. மீதி குழந்தைகள் இவர்களுடன் வசதித்து வருகின்றனர். இதில் 5 பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில், ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பிணியானார். நேற்று (26) பிரசவ வலியில் துடித்த அவர் ஜாடோல் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 17 ஆவது குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
வைத்தியசாலையில் ரேகா கல்பெலியா பிரசவத்திற்கு அனுமதித்த போது இவருக்கு 4 ஆவது பிரசவம் என அவர்கள் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வறுமையில் தவிக்கும் காவ்ரா கல்பெலியா தம்பதியினர் 16 குழந்தைகளை வளர்த்தெடுக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அவரது மகள் ஷிலா கல்பெலியா தெரிவிக்கும் போது, எங்கள் குடும்பம் வாழ்வதற்கு பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் அனைவரும் நிறைய சிரமங்களை எதிர் கொண்டு வருகிறோம். எங்கள் தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர் என்றார்.
குப்பை சேகரிப்பதன் மூலம் உயிர்வாழும் எங்கள் குடும்பத்தினரால் குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியவில்லை. 'பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஒரு வீடு எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு பசி தீர்க்க உணவும், கல்வி வழங்கவும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கும் போதுமான பண வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை சந்தித்து வருவதாக 17 குழந்தைகளின் தந்தை காவ்ரா கல்பெலியா கூறியுள்ளார்.

