Header Logo

செய்திகள்
ஹரக் கட்டா வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்

Sep 1, 2025 - 12:49 PM -

0

ஹரக் கட்டா வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்

மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து முச்சக்கர வண்டி மற்றும் 26,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனக் கூறப்படும் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (01) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இதன்போது, ​​அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் முறைப்பாட்டு தரப்பின் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

அதன் பின்னர் மேலதிக சாட்சிய விசாரணைக்காக ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது. 

இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஹரக் கட்டா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அதேநேரம், கடுமையான பரிசோதனைக்குப் பிறகே மக்கள் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!