Sep 2, 2025 - 01:18 PM -
0
செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், மாதத்தில் முதல் நாளே நேற்று (01) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தினசரி தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபா உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 9,705 ரூபாவுக்கும், சவரனுக்கு 680 ரூபாவுக்கும் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 77,640 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (02) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபா உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 9,725 ரூபாவுக்கும், சவரனுக்கு 160 ரூபா உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.77,800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 8.045 ரூபாவுக்கும், சவரனுக்கு 120 ரூபாவுக்கும் உயர்ந்து ஒரு சவரன் 64,360 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 137 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,37,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.