Sep 3, 2025 - 04:44 PM -
0
இயற்கையில் பல்வேறு தனிமங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சோடியம் என்ற தனிமத்தின் அணுக்கள் இணைந்து சோடியம் என்ற தனிமத்தை உருவாக்குகின்றன, இது ஒரு மென்மையான, வெள்ளை நிற உலோக வகை தனிமம் ஆகும். இது காற்றில் தீவிரமாக எரியும் இயல்பு கொண்டது. அத்துடன் தண்ணீருடன் கலக்கும் போது வெடிக்கும் தன்மை கொண்டது.
குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன. இது மஞ்சள்-பச்சை நிறத்தில் காணப்படும் ஒரு வாயு, உலோகங்களை அரிக்கும் தன்மை கொண்டது. மேலும், விலங்குகள், தாவரங்கள் இதனை நுகர்ந்தால் நஞ்சாக மாறும், மிகவும் நச்சுத் தன்மையுடையது.
இயற்கையின் விதியில், சோடியம் என்ற வெடிக்கும் தனிமம், நச்சுத்தன்மை கொண்ட குளோரின் என்ற இரண்டு தனிமங்கள் இணையும் போது, அவை இரண்டும் தங்கள் தீவிர தன்மையை இழந்து மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு உப்பை உருவாக்குகின்றன. அதுவே சோடியம் குளோரைடு எனப்படும் சமையல் உப்பு ஆகும். உணவு தயாரிப்பில் பெருமளவு சமையல் உப்பு பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது. கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
உப்பு பல நேர்மறையான பண்புகளை கொண்டதாக இருந்த போதிலும், அதிக அளவில் சேர்க்கப்படும் உப்பு, கோழிகள், நாய்கள், பூனைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
பெரியவர்களுக்கு சோடியம் உப்பு தினசரி உட்கொள்ளல் அளவு 2,300 மி.கி.க்கும் குறைவாகவும், உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 500 மி.கி. என்ற சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது. அதிக உப்பு உடலுக்கு ஆபத்து என்கின்றனர்.

