Header Logo
Mogo Academy

உலகம்
ரஷியா, சீனாவை எதிர்கொள்ள இராணுவத்தை தயார் செய்யுங்கள்! டிரம்ப் உத்தரவு

Sep 5, 2025 - 11:04 AM -

0

ரஷியா, சீனாவை எதிர்கொள்ள இராணுவத்தை தயார் செய்யுங்கள்!  டிரம்ப் உத்தரவு
Mobitel inner

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. 

இந்த அணிவகுப்பை சீன ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் பார்வையிட்டனர். 

இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா இணைந்து சதி செய்வதாக அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில் ரஷியா, சீனாவை எதிர்கொள்ள இராணுவ தயார்நிலையை கணிசமாக அதிகரிக்க அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (பென்டகன்) உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சீனா, ரஷியா, வட கொரியா மூன்று நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு அமெரிக்காவிற்கு எதிராக வலுவடைந்து வருவதற்கான அறிகுறி என்று வொஷிங்டன் நம்புகிறது. 

டிரம்ப்பின் உத்தரவுகளை பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார். 

இதுகுறித்து ஊகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "இந்த நடவடிக்கைகள் போரை நாடுவதற்காக அல்ல, மாறாக வீரர்களின் மன உறுதியை புதுப்பிக்க மட்டுமே. 

துரதிர்ஷ்டவசமாக, முந்தைய நிர்வாகத்தின் பலவீனமான கொள்கைகள் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன. இது அமெரிக்கத் தலைமை இல்லாததற்கான சான்றாகும். 

அதனால்தான் ஜனாதிபதி டிரம்ப் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தடுப்பு திறனை மறுசீரமைக்க தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

நாங்கள் மோதலை விரும்பவில்லை. சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு நாங்கள் போரைத் தவிர்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்" என்று கூறினார்.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara