Sep 7, 2025 - 02:07 PM -
0
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள தௌராலா பகுதியில் உள்ள கிராமங்களில் நிர்வாண கும்பல் என அழைக்கப்படும் மர்மக் கும்பலால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
விவசாய நிலங்களில் இருந்து திடீரென நிர்வாணமாக வெளியே வரும் நபர்கள், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் நான்கு முறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாராலா கிராமம் அருகே, சில நாட்களுக்கு முன்பு பணிக்குச் சென்ற பெண் ஒருவரை அவ்வாறு 2 பேர் சூழ்ந்தனர். அந்தப் பெண் சத்தம் போட்டதால் அந்த நபர்கள் தப்பிவிட்டனர்.
அவமானத்தால் இத்தகைய சம்பவங்கள் இதற்கு முன் வெளியே கூறப்படாமல் இருந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவதாக அந்த கிராமத் தலைவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைப் பிடிக்கவும், மக்களின் அச்சத்தைப் போக்கவும் கிராமத்தில் சிசிடிவி கெமராக்கள் நிறுவப்பட்டு, பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிரோன்களை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

