பல்சுவை
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

Sep 8, 2025 - 01:11 PM -

0

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

இந்தியாவின் ரஷ்ய - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ஆபரணம், ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக தங்கத்தை கருதி வரும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ஏறத்தாழ ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து தினசரி உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் 10,000 ரூபாவை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது. 

அந்த வகையில் நேற்று முன் தினம் (06), 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூபா 140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,005 ரூபாவுக்கும், சவரனுக்கு ரூபா 1,120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 80,040 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக இன்று (08) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபா குறைந்து ஒரு கிராம் தங்கம் 9,970 ரூபாவுக்கும், சவரனுக்கு 280 ரூபா குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.79,760 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூபா 30 குறைந்து ஒரு கிராம் 8,255 ரூபாவுக்கும், சவரனுக்கு ரூபா 240 குறைந்து ஒரு சவரன் 66,040 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூபா 1 குறைந்து ஒரு கிராம் 137 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,37,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05