ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (10.09.2025)

Sep 10, 2025 - 09:18 AM -

0

இன்றைய ராசிப்பலன் (10.09.2025)

இன்று (10) சந்திர பகவான் மீனம், மேஷத்தில் பயணிக்கிறார். இன்று விருத்தி யோக அருளால் ரிஷபம் துலாம் உள்ளிட்ட ராசிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். இன்று சிம்ம ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். 

மேஷ ராசி பலன் 

மேஷம் ராசி சேர்ந்தவர்கள் இன்று நண்பர்களுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் உங்களை பாதிக்கும். இன்று அனுசரித்துச் செல்வது அவசியம். திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் நிறைந்திருக்கும். புதிய வேலையில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் சகோதரர்களின் ஆலோசனைகள் குடும்பத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள். அதனால் மரியாதை கிடைக்கும். 

ரிஷபம் ராசிபலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்கள் பணியிடத்தில் புதிய திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். இது உங்கள் வேலையை வேகப்படுத்தும். அரசு தொடர்பான வேலை செய்பவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும். இன்று சிலர் மேலதிகாரிகளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். இன்று உங்களின் காதல் வாழ்க்கையில் பரபரப்பான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்வதும், மகிழ்ச்சியாக இருக்கவும் முயற்சி செய்யவும். இன்று உங்களின் உடன் பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். சமூக பணிகளில் ஈடுபடுவீர்கள். 

மிதுன ராசி பலன் 

மிதுனம் ராசி சேர்ந்தவர்கள் உங்களுக்கு நாள் தொடக்கத்தில் இருந்து சிறிய லாபங்கள் ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தின் சிறப்பு கவனம் செலுத்தவும். சிறிய பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகுவது நல்லது. புதிய வேலையை தொடங்க நினைப்பவர்கள் கடின உழைப்பிற்கு பின்னரே எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று அரசு, செயல் தொடர்புடையவர்களுக்கு பணி சுமை நிறைந்திருக்கும். இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். 

கடக ராசி பலன் 

கடக ராசியை சேர்ந்தவர்கள் இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திச் சேமிப்பதில் அக்கறை செலுத்தவும். சில நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த பணியிடத்திலே எதிரிகளால் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். பணியிடத்தில் உங்களுக்கு வாய்ப்புகளும், சில செய்திகளும் அதிகரிக்கும். திருமணத்திற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். இன்று போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் சில தடைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. 

சிம்ம ராசி பலன் 

சிம்மம் ராசி சேர்ந்தவர்கள் உங்களுக்கு தந்தையின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு செல்வம் சேர வாய்ப்பு உண்டு. சகோதரர்களின் உதவியை நிலைமையில் உள்ள வேலைகளை நிறைவேற்ற முடியும். திடீர் பணம் ஆதாயம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் எதிரிகளின் தொல்லையைச் சந்திக்க நேரிடும். அதனால் உங்கள் வேலையில் திட்டமிடுவதும், கவனமாக செயல்படுவதும் அவசியம். வேலை தொடர்பாக புதிய சாதனையை படைப்புகள். பெரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். மனிதனால் சில இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி சேர்ந்தவர்கள் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் தொடர்பாக சிந்தனை உடன் செயல்படுவார்கள். படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு உண்டு. இன்று எதிர்காலத்திற்கான திட்டமிடலில் ஈடுபடுவீர்கள். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்களின் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கடினமாக உழைக்க ஊக்கமளிக்கும். வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்த பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகள் நல்ல பலனை தரும். பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த நிதானமாக செயல்படுவது அவசியம். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி சேர்ந்தவர்கள் உங்களுக்கு பணியிடத்தில் பதவி மற்றும் அதிகாரம் கிடைக்கலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மாணவர்கள் தங்களின் படிப்பு தொடர்பாக இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காததால் குழப்பத்தில் இருப்பார்கள். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்லும் வாய்ப்புகள் இருக்கும். தந்தை போன்ற பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் முழு ஆதரவு தரக்கூடிய நாள். நீதிமன்றம் வழக்குகள் தொடர்பாக நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். இன்று ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொண்டு பணிகளில் பங்கேற்பீர்கள். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிகம் ராசி சேர்ந்தவர்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும். வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பெறுவீர்கள். அரசு தொடர்பான சலுகைகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து திடீரெனில் நல்ல செய்திகளை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். வெற்றி அதிகரிக்க கூடிய நாள். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி சேர்ந்தவர்கள் எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொடர்புகள் உங்களின் செல்வத்தை அதிகரிக்கும். அரசாங்கம் தொடர்பான வேலைகள் வேகம் எடுக்கும். இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உண்டு. சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான வழிகளை தேடுவீர்கள். 

மகர ராசி பலன் 

மகரம் ராசி சேர்ந்தவர்கள் இன்று உங்களுக்கு திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். உங்களின் மனதில் உறுதியும், வீரமும் அதிகரிக்கும் என்பதால் எதிரிகளை எளிதாக வெல்ல முடியும். இன்று நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படவும். அவ நம்பிக்கைகளை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் எதிர்காலம் குறித்து விவாதிப்பீர்கள். இன்று உங்கள் துணையின் ஆரோக்கியத்தை சிறப்பு கவனம் செலுத்தவும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்த்து அனுசரித்து செல்லவும். இன்று பிறர் வேலையில் கவனம் செலுத்துவதை விட உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். 

கும்ப ராசி பலன் 

கும்பம் ராசி சேர்ந்தவர்கள் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் குழப்பமான சூழல் இருக்கும். கிருத்தி வேறுபாடுகளை இனிமையான பேச்சின் மூலம் தீர்க்க முடியும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. அரசு ஊழியர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உலக இன்பங்களை அனுபவிப்பீர்கள். இன்று ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வணிகம் தொடர்பான விஷயங்களில் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மனதில் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். சொந்த தொழிலில் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். 

மீன ராசி பலன் 

மீன ராசி இன்று குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதில் அதிக நேரம் செலவிட நேரிடும். இன்று மாணவர்கள் கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறலாம். வீடு சொத்து வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சாதனைகளை படைத்திருக்கும். பருவநிலை மாற்றத்தால் உங்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் சிறப்பு கவனம். செலுத்தவும் காதல் வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும். இன்று நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்க சாதகமான நாள். அதிர்ஷ்டத்தின் முழுஆதரவை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் உருவாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05