Header Logo
செய்திகள்
மற்றுமொரு கோர விபத்து - எழுவர் காயம்

Sep 12, 2025 - 03:17 PM

மற்றுமொரு கோர விபத்து - எழுவர் காயம்
Mobitel inner

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூவெலிகம பகுதியில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது 

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இன்று (12) காலை 8.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரி பாகம், காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய ஆறு பேரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara