Header Logo
Mogo Academy

செய்திகள்
வீதி விபத்தில் இளம் குடும்பப் பெண் பலி!

Sep 12, 2025 - 07:39 PM -

0

வீதி விபத்தில் இளம் குடும்பப் பெண் பலி!
Mobitel inner

கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் வசித்த 40 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 09 ஆம் திகதி வைத்தியசாலை செல்வதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார். 

இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார். 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara