Header Logo

செய்திகள்
பொலிஸாரின் விசேட சோதனைகளில் பலர் கைது

Sep 12, 2025 - 10:05 PM -

0

பொலிஸாரின் விசேட சோதனைகளில் பலர் கைது

சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் நடத்திய சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த  5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 3,017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

3,018 சோதனைகள் நடவடிக்கைகள் ஊடாக குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஹெரோயின் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய 1,014 சோதனைகளில் 1,014 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல், ஐஸ் தொடர்பான 1,031 சோதனை நடவடிக்கைகளில் 1,030 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த சோதனைகளின் போது, ​​1 கிலோ 618 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளையும், 2 கிலோ 156 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்த விசேட சோதனைகளின் போது 8,260 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதன், அவை தொடர்பாக 48 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title