உலகம்
இங்கிலாந்தில் சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு!

Sep 13, 2025 - 11:55 AM -

0

இங்கிலாந்தில் சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு!

இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இனவெறித் தாக்குதலுக்கும் ஆளான சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அந்தப் பெண்ணிடம் "நீ உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்" என்றும் கூறியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த சம்பவமானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் மீதான மோசமான தாக்குதலை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணியளவில் ஓல்ட்பரியில் உள்ள டேம் வீதி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

குறித்த சம்பவத்தை இன ரீதியான மோசமான தாக்குதலாகக் கருதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடமும் கோரியுள்ளனர். 

அத்துடன் அந்த வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி உதவியுடன் தடயவியல் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

சந்தேக நபர்கள் "வெள்ளை நிற ஆண்கள்" என்றும் அவர்களில் ஒருவர் மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் இருந்ததாகவும் மற்றொரு சந்தேக நபர் சாம்பல் நிற மேல் சட்டை அணிந்திருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் உள்ளூர் சீக்கிய சமூகத்தை ஆத்திரமடைய செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

அத்துடன் ஒரு சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த தாக்குதலை அடுத்து சீக்கிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05