Sep 14, 2025 - 03:13 PM -
0
பிறந்த பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே குளிர்சாதன பெட்டியில் வைத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் - உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தின் ஜப்பார் காலனி சேர்ந்தவர் ஆர்த்தி. 30 வயதாகும் இவர் திருமணம் ஆகி தனது கணவர் மற்றும் அவரது மாமியார் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த ஆர்த்தி கர்ப்பம் தரித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தொடர்ந்து உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆரத்தி குழந்தையுடன் கடந்து சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி இரவு வீட்டில் குழந்தையுடன் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது குழந்தை திடீரென குழந்தை அழுதுள்ளது. அப்போது ஆர்த்தி உடனே குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், குளிர் மற்றும் வலித்தாங்க முடியாமல் கதறிய குழந்தை கத்தி அழுதுள்ளது. பின்னர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சமையலறைக்கு ஓடி வந்த அவரது மாமியார் , சமயலறை முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அதில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து குழந்தையை குளிர்சாதன பெட்டியில் இருந்து மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேச அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 15 நாள் குழந்தையை அழைத்து சென்றன.
அங்கு தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை தரப்பில் இருந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக வைத்தியசாலைக்கு சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணை பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் தூங்கவில்லை, அதனால் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தேன்" என்று பதிலளித்தார்.
இதனை கேட்டு பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்த போது, பேய் பிடித்து இருப்பதாக கருதி கோவிலுக்கு அழைத்து சென்று மந்திரம் போட்டதாக கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மன அழுத்ததில் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவர் ஒரு மனநல மருத்துவம் மற்றும் போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மனநல மருத்துவரால் அவருக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் இப்போது ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற்று வருகிறார்.
குழந்தை பெற்ற பலருக்கு, குழந்தை பிறந்த பிறகு லேசான மனநிலை மாற்றங்கள் ஏற்படும், இது "பேபி ப்ளூஸ்" என்று அழைக்கப்படுகிறது.
இதனை சாதராணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நோய் தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக உத்திரபிரதேஸில் ஆண் குழந்தை வேண்டி பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் தாயே குழந்தையை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்த மற்றொரு சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

