பல்சுவை
பசை போட்டு ஒட்டப்பட்ட பாடசாலை மாணவர்களின் கண்கள்

Sep 14, 2025 - 10:01 PM -

0

பசை போட்டு ஒட்டப்பட்ட பாடசாலை மாணவர்களின் கண்கள்

இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர். 

இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. 

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த சம்பவத்தை அடுத்து அப்பாடசாலையின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05