Sep 16, 2025 - 12:04 PM -
0
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை 10,000 ரூபா கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முன்பு எப்போதும் இல்லாத வகையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ஏறத்தாழ ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி தங்கம் விலை குறைந்த நிலையில், நேற்று (15) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. 2 நாட்கள் இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன் படி இன்று (16) செப்டம்பர் 16 ஆம் திகதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபா உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை 10,280 ரூபாவுக்கும், சவரனுக்கு ரூபா 560 உயர்ந்து ஒரு சவரன் 82,240 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் 8,515 ரூபாவுக்கும், சவரனுக்கு ரூபாவுக்கும் 480 உயர்ந்து ஒரு சவரன் 68,120 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூபா 1 உயர்ந்து ஒரு கிராம் 144 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,44,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

