Header Logo
SLIC
கிழக்கு
இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

Sep 18, 2025 - 02:57 PM

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று (18) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் இன்று பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கணேசமூர்த்தி கலாரஞ்சனி ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

324 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுடன், எண்டோஸ்கோபி பிரிவும் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் என வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

இவ் வைத்தியசாலையின் குறைபாடாக திகழ்ந்து வரும் MRI பிரிவு எதிர்வரும் தை மாதம் அளவில் திறந்து வைக்கப்படுமெனவும், சுகாதார துறைசார்ந்த 17 பாரிய திட்டங்களுக்கான அனுமதியினை கடந்த அமைச்சரவை அமர்வில் சமர்பித்து அவற்றிற்கும் நாம் அனுமதியினை பெற்றுள்ளோம், அவற்றின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் கட்டட குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாம் பூர்த்தி செய்து தருவோம் எனவும் இதன் போது அமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார். 

நிகழ்வின் இறுதியில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278