Sep 19, 2025 - 02:02 PM -
0
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (3ஆவது தலைமுறை) அனைத்தும் இம்மாதம் 9 ஆம் திகதி நடந்த 'Awe Dropping' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் அதன் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஆப்பிளின் சமீபத்திய சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
கூடுதலாக, அவை டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.
இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விடிய, விடிய நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். டெல்லி மற்றும் மும்பை ஆப்பிள் நிறுவனங்கள் முன்பு பல அடி தூரத்திற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.