Header Logo
Mogo Academy

உலகம்
வெடித்த சர்ச்சை - வினோத பின்னணி!

Sep 20, 2025 - 09:51 AM -

0

வெடித்த சர்ச்சை - வினோத பின்னணி!
Mobitel inner

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பாடசாலை ஆசிரியை பிரிஜிட்டை மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பாடசாலை ஆசிரியராக இருந்தார். 

மேக்ரான் தற்போது பிரான்சின் ஜனாதிபதியாக இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தில் பணியாற்றி வருகிறார். 

இதற்கிடையே மேக்ரான்ஒரு வினோதமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளார். 

அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

மேக்ரான் உடைய மனைவி பிரிஜிட் மேக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் பல காலமாக வதந்திகள் பரவி வருகின்றன. 

உண்மையில் இந்த சர்ச்சை 2017 இல் பிரான்சில் ஆரம்பமாகியது. நடாஷா ரே என்பர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பிரிஜிட் மேக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார். 

மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் வீடியோவில் நடாஷா கூறியிருந்தார். 

இதுதொடர்பான அவதூறு வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டது. 

இதற்கிடையே அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மேக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார். அவருக்கு எதிராக மேக்ரான் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர். 

வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மேக்ரான் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மேக்ரானின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara