Sep 20, 2025 - 04:23 PM -
0
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, திருச்சி, அரியலூரை தொடர்ந்து இன்று (20) இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இதில், தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார்.
அப்போது அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
பிரசாரத்தில் விஜய் தெரிவித்ததாவது,
உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.
அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன் என தெரிவித்தார்.