Sep 21, 2025 - 08:51 AM -
0
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது).
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவரின் மனைவிக்கும் இடையே நீண்ட நாள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அது காதலாக மாறிய நிலையில் இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது விருப்பங்களை நிறைவேற்றி வந்துள்ளனர்.
குறித்த விடயம் அந்த இளைஞருக்கு தெரியவந்த நிலையில், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நாகராஜனுக்கும், அந்த இளைஞருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில் ஆத்திரம் அடைந்த குறித்த இளைஞர், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நாகராஜனை தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி கடிக்க வைத்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த நாகராஜன், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்ணகி நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.