Header Logo
Mogo Academy

உலகம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்த பிரபல நாடுகள்

Sep 22, 2025 - 06:40 AM -

0

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்த பிரபல நாடுகள்
Mobitel inner

தங்களை தனி நாடாக அங்கீகரித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு பாலஸ்தீன அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். 

கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். 

இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 

அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. 

இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. 

இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது. 

இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு பாலஸ்தீன அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara