பல்சுவை
இது தெரியாம கல்யாணம் பண்ணாதீங்க!

Sep 22, 2025 - 05:04 PM -

0

இது தெரியாம கல்யாணம் பண்ணாதீங்க!

இருமனம் இணைய வயது ஒரு தடையில்லை. காதலுக்கு சாதி, வயது, பாலினம் எதுவும் தெரியாது. ஆனால் வெற்றிகரமான திருமணத்திற்கு அறிவியல்ரீதியாக குறிப்பிட்ட வயது வித்தியாசம் சொல்லப்படுகிறது. பொதுவாக நம் நாட்டில் கணவனை விட மனைவி வயது குறைந்தவராகவே இருக்கிறார்கள். பலரும் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது மனைவி வயது குறைந்தவராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் இங்கு வயது வெறும் வயதல்ல. இந்தப் பதிவில் மகிழ்ச்சியான இல்லறத்திற்கு கணவனுக்கும், மனைவிக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை காணலாம். 

இந்திய கலாச்சாரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் 3 முதல் 5 வயதுவரை வித்தியாசம் இருப்பது பரவலாக பின்பற்றப்படுகிறது. கணவரே மூத்தவராக இருப்பார். பெரும்பாலும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அப்படிதான் இருக்கிறது. 

பொதுசமூகம் இப்படி வயது வித்தியாசத்தை பின்பற்றி வந்தாலும், பாரிய வயது வித்தியாசம் கொண்ட திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை பெரும்பாலும் காதல்திருமணங்களாகும். ஆனால் வயது வித்தியாசம் வெறும் கலாச்சார நம்பிக்கை இல்லை. அதில் அறிவியல்ரீதியான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. திருமண பந்தத்திற்கு உடல், மன முதிர்ச்சி தேவை. 

பெண்கள் ஆண்களைவிட வேகமாக முதிர்ச்சி அடைபவர்கள். அவர்களுடைய 7 முதல் 13 வயதுக்குள் அவர்கள் பருவத்திற்கான ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதே ஆண் பிள்ளைகளுக்கு 9 முதல் 15 வயதில் தான் பருவ ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். ஆகவே ஆண்களுக்கு முன்பே பெண்கள் மனநிலை, உடல்ரீதியாக முதிர்ச்சியடைகிறார்கள். 

திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் 3 வயது வித்தியாசம் போதுமானது என சொல்லப்படுகிறது. இதை அறிவியல் கண்ணோட்டத்துடன் நோக்கினால் உடல் முதிர்ச்சியை அடிப்படையாக கொண்டு தீர்மானிப்பார்கள். உண்மையில் திருமணம் என்பது உடல் வளர்ச்சியைத் தாண்டி மன வளர்ச்சியையும், தயார் நிலையையும் சார்ந்தது. 

இருவரின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய வயது முக்கிய காரணம் இல்லை. இல்லறம் வெற்றிகரமாக இருக்க தம்பதிகளுக்குள் அன்பு, மரியாதை, பகிர்தல், புரிதல் ஆகியவை இருக்க வேண்டும். அது சரியாக இருந்தால் வயது வித்தியாசம் 3 அல்லது 30 எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05