Header Logo
Mogo Academy

உலகம்
தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய 20 தொழிலாளர்கள்

Sep 24, 2025 - 10:34 AM -

0

தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய 20 தொழிலாளர்கள்
Mobitel inner

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. 

இங்குள்ள சுரங்கங்களில் ஆபத்தான முறையில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

கடந்த ஆண்டு மட்டும் 6.6 டன் தங்கம் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்கச் சுரங்கங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. 

அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் தகவல்கள் வௌியாகவில்லை. 

சமீபத்தில் கொலம்பியாவில் ஒரு சட்டவிரோதச் சுரங்கத்தில் ஏழு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 

9 நாட்கள் போராடி உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை மீட்புக் குழு மீட்டெடுத்தது. இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்களில் மீண்டும் தங்கச் சுரங்கம் இடிந்து தொழிலாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara