Sep 25, 2025 - 12:32 PM -
0
இந்தியாவில் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சியாளருமாக இருப்பவர் ஏபிவி மேத்யூ. இவர் சில பெண்கள் மற்றும் இளம் பெண்களுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொனனகுண்டே பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மேத்யூவிடம் 2,500 இற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதை அறிந்த மேத்யூ தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மகளிர் ஆணையத்திலும் மேத்யூ மீது இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கொனனகுண்டே பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏபிவி மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.