Header Logo
Mogo Academy

உலகம்
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு

Sep 30, 2025 - 07:07 PM -

0

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
Mobitel inner

பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் வீதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். 

குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர். 

தகவல் அறிந்து பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். 

குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 32 பேர் காயமடைந்துள்ளனர். 

பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார். ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara