Header Logo
SLIC
Rhythams of Lanka
உலகம்
அமெரிக்க அரச நிர்வாகம் முடங்கியது

Oct 1, 2025 - 03:05 PM

அமெரிக்க அரச நிர்வாகம் முடங்கியது
Mobitel inner

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சி செய்து வருகிறது. 

இந்நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்டமூலத்தை கொண்டு வந்தது. 

இந்த சட்டமூலத்தில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

எனினும் இந்த சட்டமூலத்திற்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்த சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 பேர் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆனால், இதற்கு ஜனநாயக கட்சி தலைமை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், டிரம்பின் சுகாதார திட்டங்கள் தொடர்பான மருத்துவ காப்பீட்டு சலுகைகளை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். 

ஆனால், அதனை டிரம்ப் ஏற்க மறுத்ததன் காரணமாக, அவர் கொண்டு வந்த புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைப்பட்டுள்ளது. 

சட்டமூலத்திற்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகளும், எதிராக 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த சட்டமூலம் நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரச நிர்வாகம் முடங்கியுள்ளது. 

இதனால், அமெரிக்க நேரப்படி இன்று (1) புதன்கிழமை நள்ளிரவு 12.01 மணிமுதல், அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். விமானப் போக்குவரத்து முதல் சிறு வணிக கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்காததால் அரச செலவீனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்க பாரளுமன்றத்தில் அரச நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரச ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைப்பட்டுள்ளதால் அரச உதவி பெறும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதில், அமெரிக்க இராணுவம் மற்றும் தபால் சேவை உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா அரச நிர்வாகம் முடங்கி இருப்பதன் காரணமாக சுமார் 7.50 இலட்சம் அரச ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தடைபடும் என்றும், இதனால் அமெரிக்க அரசுக்கு ஒரு நாளைக்கு 3,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் நிதி வழங்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறாத நிலையில் கடந்த 2018- ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா அரச நிர்வாகம் தற்போது முடங்கியுள்ளது. 

கடந்த 40 வருடங்களில் அமெரிக்காவின் அரச நிர்வாகம் இதுவரை 11 தடவைகள் முடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

மற்ற நாடுகளில், போர்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட, அரசாங்கங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. 

ஆனால் அமெரிக்க அரசியல் அமைப்பில் காணப்படும் தனித்துவ பண்பு காரணமாக அரசாங்கத்தின் வெவ்வேறு கிளைகளை வெவ்வேறு கட்சிகளால் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசியலமைப்பு அனுமதிப்பதால் இவ்வாறு அரச நிர்வாகம் முடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

Mobitel Upahara