Oct 5, 2025 - 12:18 PM -
0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மாதம் 27 ஆம் திகதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சூழலில் விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில், தமிழக வெற்றிக் கழகத்தினர் 2 விதமான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தளபதியை காப்போம்! தமிழகத்தை மீட்போம்! எவ்வளவு வலிகள் தந்தாலும் நாங்கள் வழி மாற மாட்டோம்! என்றும், நாங்கள் உங்களுடன்தான் நிற்போம்! என்று விஜய்க்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இந்த சுவரொட்டி நகர் முழுவதும் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுதொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் மற்றும் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.