Header Logo
Mogo Academy

கிழக்கு
கைதான இருவரிடம் கல்முனை விசேட அதிரடிப் படையினர் விசாரணை

Oct 6, 2025 - 04:03 PM -

0

கைதான இருவரிடம் கல்முனை விசேட அதிரடிப் படையினர் விசாரணை
Mobitel inner

அம்பாறை மாவட்டம் - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறித்த கைது நடவடிக்கையை நேற்று (05) இரவு முன்னெடுத்தனர். 

ஐஸ் 760 மில்லி கிராம் உட்பட ஒரு தொகை பணமும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டது. கைதானவர் பெரிய நீலாவணை பகுதி வீ.சி. வீதியை சேர்ந்த 36 வயதுடையவராவார். இதற்கு முன்னரும் குறித்த சந்தேக நபர் கடந்த ஒரு தடவை போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதே வேளை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கல்முனைக்குடி - 3 பிரிவு கடற்கரை வீதியிலுள்ள பள்ளிவாசல் அருகில் 27 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். 

இச்சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் 1,800 மில்லி கிராம் மீட்கப்பட்டது. குறித்த சந்தேக நபர் இனிப்பு வியாபாரி போன்று நடமாடி போதைப்பொருளுடன் கைதானதாக கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர். 

மேலும் இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி.சமந்த டி சில்வா பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி ரத்னவீர அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என் குலதுங்கவின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara