Header Logo
SLIC
கிழக்கு
போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை

Oct 6, 2025 - 05:57 PM

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை
Mobitel Inner 1278
EDEX Inner

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். 

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி வழிகாட்டலில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பில் போயா விடுமுறை நாளான இன்று குறித்த விற்பனையில் ஈடுபடுவதாக சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் மாறுவேடத்தில் சென்று இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இவ்வாறு கைதானவரிடம் இருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 40 இற்கும் பியர்கள் உட்பட 25 இற்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278