கிழக்கு
நாட்டை அகல பாதாளத்திற்கு தள்ளுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன

Oct 17, 2025 - 12:55 PM -

0

நாட்டை அகல பாதாளத்திற்கு தள்ளுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன

இந்த நாட்டை போதை நாடாக மாற்ற முயற்சித்து தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்கட்சியாக இருந்து வரும் சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சி கடந்த காலத்தில் மத்திய வங்கி கொள்ளைகாரர் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரமாட்டோம் என்றார்கள் இன்று வங்குரோத்து அரசியலுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை அகல பாதாளத்திற்கு தள்ளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

மட்டக்களப்பில் அவரது காரியாலயத்தில் நேற்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேரும் தெரிவிக்கையில், 

நாங்கள் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்பதை நீங்கள் அவதானிக்க முடியும் விசேடமாக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படுவாரா? என பாராளுமன்றத்தில் கூட பேசப்பட்டது. ஆனால் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்து வரக்கூடிய அரசாங்கமாக இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இந்த நாட்டிலே பழம்பெரும் அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஊடாக இந்த நாடும் மக்களும் எதிர் நோக்கியுள்ள பல பிரச்சனைகள் பல ஊழல் மோசடிகள் மத்திய வங்கி கொள்ளையர்களுடன் ஒன்று சேரமாட்டோம் என சஜித் பிரேமதாச அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கடந்த காலத்தில் ரணில், ராஜபக்ஷ என நாங்கள் குறிப்பிடும் போது ரணிலுடன் மகிந்தவுக்கு நேரடியாக உறவு இருந்ததன் காரணமாக பின் கதவால் இந்த நாட்டுக்குள்ளே உள்ள பாராளுமன்றத்துக்கு வந்தவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க. இவர் ஜனாதிபதியாக வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு மகிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ஆனார். இதற்கு சஜித் கட்சி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அன்று ஒன்று சேரமாட்டோம் என்று கூறிய சஜித் அணியினர் இன்று அந்த நிலை மாறி அதே கட்சியுடன் இன்று ஒன்று இணைந்து தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்ததலதா அத்துகோரல இப்போது ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டு இரு கட்சியையும் இணைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 

இன்று எதிர்கட்சி ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்கட்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. விசேடமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் மட்டுமல்ல நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அணியுடன் சேர்ந்துள்ளனர். 

இப்போது இவர்கள் ரணிலுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை ஆட்சி செய்யப் போவதாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே இவர்களுக்குள் எந்த கொள்கையும் இல்லாத இவர்கள் எப்படி இந்த நாட்டை வழிநடத்த போகின்றனர்?, அன்று கொள்ளையர்கள் என்றனர் இப்போது ஒன்று சேர்ந்தால் நோக்கம் என்ன? இவர்கள் வங்குரோத்து அரசியலை மக்களுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். 

இந்த திராணியற்றவர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் வங்குரோத்து நாடாக மாற்றி மீண்டும் பாதாளத்துக்கு தள்ளுவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05