Header Logo
SLIC
உலகம்
கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கூட்டநெரிசல்! அதிகரிக்கும் பாதிப்புகள்!

Oct 17, 2025 - 09:53 PM

கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கூட்டநெரிசல்! அதிகரிக்கும் பாதிப்புகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

மறைந்த கென்ய முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்காவின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த, கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்கா (வயது 80), கடந்த ஒக்.15 ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து, அவரது உடல் தனி விமானம் மூலம் கென்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, தலைநகர் நைரோபியில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக நேற்று (ஒக். 16) அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது, அவருக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 

இதனால், மக்களை விரட்ட பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இன்று (ஒக். 17) அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மீண்டும் ஆயிரக்கணக்கான கென்ய மக்கள் திரண்டுள்ளனர். 

அப்போது, அங்கு கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்ட நிலையில், நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278