Header Logo
SLIC
கிழக்கு
மட்டு. ஊடக அமையத்தின் கோரிக்கை!

Oct 19, 2025 - 04:29 PM

மட்டு. ஊடக அமையத்தின் கோரிக்கை!
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு. ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. 

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம. நிமலராஜன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் கிழங்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் யுத்தம் உக்கிரமாக இருந்த வேளையில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தற்துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு நிமலராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகாளாகியும் இதுவரையில் படுகொலையாளிகளுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

மாறிமாறி ஆட்சிக்குவந்த அரசுகள் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் பாராமுகமாகவேயிருந்துவந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசும் அதேபோக்கில் செயற்பட்டுவருவதாகவும் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278