Oct 26, 2025 - 03:58 PM -
0
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தனது 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை, 35 வயதான சங்கீதா தனது நான்கு வயது மகன் சிவான்ஷ் மற்றும் 14 மாத குழந்தை ஆகியோரின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்து கொன்றார்.
பின்னர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் நடந்தபோது அவரது கணவர் ஹரிச்சந்திரா வீட்டில் இல்லை.
தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற சங்கீதா நேற்று காலை கணவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

