Header Logo
SLIC
உலகம்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

Oct 27, 2025 - 10:42 AM

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
Mobitel Inner 1278
EDEX Inner

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. 

தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. 

இதனிடையே, பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் உயிரிழந்தனர். 

பின்னர், கட்டாரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இதனை தொடர்ந்து துருக்கில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 

அதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றதாகவும் அப்போது நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278