Header Logo
Mogo Academy

கிழக்கு
குருக்கள்மடம் புதைகுழி வழக்கு 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Oct 27, 2025 - 03:48 PM -

0

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
Mobitel inner

மட்டக்களப்பு, குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (27) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன், முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். 

குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதி தொடர்பில் தாமதங்களை உணர்ந்த நீதவான் அவர்கள் இந்த வழக்குடன் தொடர்புடைய பங்காளர்கள் அனைவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி 02.00 மணியளவில் நீதிமன்றுக்கு வருகைதந்து கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு தெளிவான தீர்மானத்தினை எடுப்பதற்காக நீதிவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வழக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.எச்.எம்.மனாறுதீன் தெரிவித்தார். 

குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara