Header Logo
SLIC
உலகம்
இளவரசர் எண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிப்பு!

Oct 31, 2025 - 08:11 AM

இளவரசர் எண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் இளைய சகோதரரான இளவரசர் எண்ட்ரூ, யோர்க் டியூக் பதவியைத் துறந்ததையடுத்து, அவரது 'இளவரசர்' பட்டத்தை நீக்க பக்கிங்ஹாம் அரண்மனை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்ட சார்லஸ் மன்னர், இனிமேல் இளவரசர் எண்ட்ரூ, எண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்றே அழைக்கப்படுவார் என்று உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, 'இளவரசர்' பட்டத்தை இழந்த எண்ட்ரூ, 2004 ஆம் ஆண்டு முதல் அவர் வாழ்ந்து வந்த வின்ட்சர் அரண்மனையை விட்டு வெளியேற நேரிடும். 

குழந்தைகள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரும், இப்போது உயிருடன் இல்லாதவருமான அமெரிக்கரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் உடன் தொடர்பு வைத்திருந்ததாக எண்ட்ரூ மீது பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

இதன் காரணமாகவே, அவர் இந்த மாதம் இளவரசர் யோர்க் டியூக் பதவியைத் துறக்க நடவடிக்கை எடுத்தார். 

தமது முடிவைத் தெரிவிக்கும்போது அவர், தமது மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தமது சகோதரரான சார்லஸ் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் நடவடிக்கைகளையும் பாதிப்பதாகக் கூறினார். 

அத்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் இளவரசர் எண்ட்ரூவின் நெருங்கிய வணிகப் பங்குதாரர் ஒருவர் சீன ஒற்றர் என்று அம்பலமானமையும் அவர் தமது பதவியைத் துறந்ததற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278